வடமாகாண தட்டெறிதல் பதக்க வேட்டை வடமராட்சி பாடசாலைகள்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வடமராட்சி கல்வி வலய பாடசாலைகள் பதக்க வேட்டையை குவித்து முதல் 3 பதக்கங்கங்களையும் கைப்பற்றி சாதனையைப் பதிவு செய்தனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.செவ்வண்ணம் 27.11 மீற்றர் தூரம் எறிந்து வர்ணச் சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும், கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.அப்ஷரா 22.66 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் விக்னேஸ்வரா கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சாருஜா 21.18 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.