உடற்கல்வி ஆசிரியர் விபத்தில் படுகாயம்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விதத்திலேயே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது . விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பன்னாலையை சேர்ந்த 37 வயதுடைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் இரத்தினசிங்கம் ராசகாந்தன் என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற விபத்தில் காலில் உடைவு ஏற்பட்டு தற்போது சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.