Thu. May 2nd, 2024

900 ஏக்கர் மரக்கறி செய்கை முற்றாக அழிவு! தலையில் இடி விழுந்த நிலையில் விவசாயிகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் சுமார் 900 ஏக்கர் மரக்கறி செய்கை அழிவடைந்துள்ளது.

இதனால் பல நூற்றுக்கணக்கான மரக்கறி செய்கை விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டி ருப்பதாக விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மிளகாய், வெண்டி, கத்தரி, பயற்றை, புடோல் உட்பட மரக்கறிப் பயிர்ச்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகமான மரக்கறிப் பயிர்கள் அழிவடந்துள்ளதுடன் வெல்லாவெளி,

செங்கலடி, கிரான், வாகரை, கொக்கட்டிச்சோலை, உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பெருமளவிலான விவாசாயிகள் மரக்கறிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்