Thu. May 2nd, 2024

8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 100,000 பேருக்கு வேலை , அமைச்சரவை ஒப்புதல்

‘பல்நோக்கு அபிவிருத்தி பணிக்குழுவை’ அமைப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளுடன் உள்ள 100,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இது உதவும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மகாவலி, விவசாய , நீர்ப்பாசனம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சரால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, ‘அபிவிருத்தி பணி உதவியாளர்கள் சேவை’ என்ற பெயரில் ஒரு சேவையை அமைப்பதற்கும் , எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 100,000 பேரை அரச பணியில் சேர்ப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்