Thu. May 2nd, 2024

மன்னார் பிரதேச சபையின்  கணக்கு அறிக்கை நிராகரிப்பு

மன்னார் பிரதேச சபையின்  2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவு கணக்கு அறிக்கையானது இன்றைய தினம் வியாழக்கிழமை (9) அதிகளவான உறுப்பினர்களின் எதிர்ப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையினுடைய 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டமும் சபையினுடைய 22 ஆவது அமர்வும் இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாஹிர் தலைமையில் மன்னார் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
 குறித்த கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின்  கணக்கறிக்கை சபை அங்கத்தவர்ளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையானது அதிகமான பிரதிநிதிகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
 மன்னார் பிரதேச சபையின்  2019 ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவு விடயங்கள் தொடர்பாக ஆராயும் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற நிலையில்
 மன்னார் பிரதேச சபையின் உழவு இயந்திர பிரச்சினை இது வரை முடிவின்றி தொடர்வதாகவும் , மன்னார் பிரதேச சபையில் வைக்கப்பட்டிருந்த முன்னால் அமைச்சருடைய  புகைப்படம் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையிலும் அகற்றப்படாமல் இராணுவத்தினர் அகற்றியதன் மூலம் மன்னார் பிரதேச சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும், மோட்டர் கிறைண்டர் வாகனம் தொடர்பான கணக்குகள் மாதம் மாதம் சரிவர வழங்கவில்லை என்ற அடிப்படையிலும் அதே நேரத்தில் மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக பிரதி நிதிகள் ஒப்பமிட்டு வழங்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எந்த வித கவனமும் செலுத்தப்படவில்லை என்ற அடிப்படையிலும் மன்னார் பிரதேச சபையில் உள்ள ஜே.சி.பி இயந்திரம் தொடர்பான கணக்குகள் ஒழுங்காக காட்டப்படவில்லை என்ற அடிப்படையிலும் குறித்த கணக்கறிக்கை நிராகரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொண்சால் குலாஸ் தெரிவித்திருந்தார்.
 அதே நேரத்தில் சபை உறுப்பினர்கள்  கோரிக்கைகளை அல்லது கருத்துக்களை கேட்பதற்கும் தெரிவிப்பதற்கும் ஒழுங்கான நேரம் சபை கூட்டங்களில் வழங்கப்படுவதில்லை எனவும் உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத அமர்வில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழர் விடுதலைக் இயக்கத்தின்  இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்வை  புறக்கணித்து வெளியேறினர்.
அதன் பின்னர் கணக்கறிக்கை தொடர்பாக   விவாதங்கள் இடம் பெற்ற நிலையில்  வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அதன் அடிப்படையில் 10 உறுப்பினர்கள் கணக்கறிக்கையை எதிர்த்தும் 8 உறுப்பினர்கள் ஆதரித்தும் வாக்களித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் குறித்த அறிக்கையானது பெரும்பான்மை ஆதரவு இன்மையால் நிராகரிக்கப்பட்டது.
குறித்த கணக்கறிக்கை நிராகரிக்பட்டது தொடர்பாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் தெரிவிக்கையில்,,,,
மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமல் அரசியல் ரீதியாக பழி வாங்கவே இவ் கணக்கறிக்கையை ஒழுங்கான காரணம் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட சிலர் நிராகரித்துள்ளனர்.
எனினும் எம் பணி தொடர்ந்து நடை பெறும் என தெரிவித்திருந்தார்
அதே நேரத்தில் தவிசாளர் தொடர்சியாக அரசியல் பின்னனியுடன் ஒரு பக்க சர்பாக செயற்படுவதாகவும் சபை உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது இல்லை எனவும் முன்னுக்கு பின் முரணாக சட்டங்களை செயற்படுத்துவதனாலும் தான் தாங்கள் குறித்த கணக்கு அறிக்கையை நிராகரித்ததாக கணக்கு அறிக்கைக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்