Sat. Apr 27th, 2024

100 மீற்றர் ஓட்டத்தில் யதுவர்சன் தங்கம்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் யோ.யதுவர்சன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் றேஞ்சஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த யோ.யதுவர்சன் தங்கப் பதக்கத்தையும்,
டைமன்ஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த சு.பிரசன்னா வெள்ளிப் பதக்கத்தையும்
இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஏ.நிருபராகவன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். இவர்களுக்கான சான்றிதழ்களை வடமாகாண விளையாட்டு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.சுரேந்திரா வழங்கி வைத்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்