Sat. Apr 27th, 2024

ஈட்டி எறிதலில் அ.அபியந்தயன் தங்கம்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சோளங்கன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த அ.அபியந்தயன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சோளங்கன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த அ.அபியந்தன் தங்கப் பதக்கத்தையும், டைமன்ஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ரி.துசிகரன் வெள்ளி பதக்கத்தையும், இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த மு.திவான்சயன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். இவர்களுக்கான சான்றிதழ்களை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் க.கனகராஜா வழங்கி வைத்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்