Sat. Apr 27th, 2024

5000 மீற்றர் ஓட்டத்தில் அனோஜன் தங்கம்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் சோழங்கன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ம.அனோஜன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் சோழங்கன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ம.அனோஜன் தங்கப் பதக்கத்தையும்,
பியோர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த பி.பிரசன்னா வெள்ளிப் பதக்கத்தையும்,
இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த கே.யதுர்சன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்