Tue. Apr 30th, 2024

ஹொக்கியில் சாதித்தது சுந்தரபுரம் சரஸ்வதி

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவம் செய்த சுந்தரபுரம்  வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான ஹொக்கி தொடர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் சுந்தரபுரம் வித்தியாலய அணியை எதிர்த்து பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணி வீராங்கனை எஸ்.வாணுஜா ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இடைவேளைக்குப் பின்னரான ஆட்டத்தில் பண்டத்தரிப்பு வீராங்கனை ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்டம் சமநிலையானது. இதனால் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
3ம் இடத்தை முல்லைத்தீவு பாரதி வித்தியாலய அணி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்