Wed. May 1st, 2024

வெளிக்கள நிலையப் பரீட்சையும் ஆசிரியர்கள் படும்பாடும்

தொண்டைமானாறு வெளிக்கள கல்வி நிலையத்தால் நடாத்தப்படும் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை விடைத்தாளை திருத்திவதில் பல குறைபாடுகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொண்டைமானாறு வெளிக்கள கல்வி தனியார் நிறுவனத்தினரால் நடாத்தப்படும் பரீட்சைக்கு வடமாகாண கல்வித் திணைக்களம் முக்கியத்துவம் வழங்கி அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் எனவும் ஆசிரியர்கள் நிலையங்கள் அமைத்து விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களை தயார்படுத்தும் பரீட்சையாக அமைந்துள்ளது. இதனை மாகாண ஆசிரியர்களை கொண்டு தயார்ப்படுத்தாதது ஏன்? தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்படும் காரணம் என்ன? இது ஒருபுறம் இருக்க, குறித்த மாணவர்களின் பயிற்சி பரீட்சையை திருத்துவது குறித்த பாடசாலை ஆசிரியர்களே திருத்தினால் தான் மாணவர்கள் விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி பொதுப் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியும். அடுத்து திருத்தும் ஆசிரியர்களும் சரியாக திருத்தப்படுவதில்லை எனவும் சில ஆசிரியகள் குறிப்பிடுகின்றனர். இதனால் மீண்டும் தங்களுடைய மாணவர்களின் விடைகளையும் திருத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே வடமாகாண கல்வித் திணைக்களத்தால் தனியார் கல்வி நிறுவன பரீட்சைகளை நடத்தாது, மாணவர்களின் நலன்கருதி குறித்த பாடங்களில் நிபுணத்துவ ஆசிரியர்களை அழைத்து வினாத்தாளை தயார்படுத்தி பரீட்சைகளை நடாத்துவதுடன், மாணவர்களின் அடைவு மட்டத்தை அளவிட குறித்த பாடசாலை ஆசிரியர்களே விடைத்தாளை திருத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்