Mon. May 6th, 2024

வீதியில் வைத்து பழங்களை விற்ற வியாபாரிகளின் பழங்களை அள்ளி சென்ற தவிசாளர்

இன்று புதன்கிழமை நெல்லியடி சந்தை காலை 6 மணிக்கு சுகாதார ஆதாரம் முறைப்படி திறக்கப்பட்டு வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றது. பிற்பகல்  நாலு மணி அளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஊழியர்கள் பிரதேச சபையின் வாகனத்துடன் வருகைதந்து வீதியோரங்களில் விற்பனை செய்து கொண்டிருந்த பழவகை சகலதையும் அள்ளி  வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார்கள்.

பழக்கடை சந்தைக்கு மக்கள் பிற்பகலில் வரவில்லை என்பதால் சந்தைக்கு முன்னுள்ள வீதியில் வியாபாரிகள் பழங்களை விற்பனை செய்துள்ளார்கள். இதனாலேயே தவிசாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த திடீர் நடவடிக்கையை எதிர்பாராத வியாபாரிகள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து கொண்டிருந்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்