Thu. May 2nd, 2024

வாழ்வாதார உதவியும் சான்றிதழ் பெற்றுக் கொடுக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கும்

பிரித்தானிய உயர்ஸ்தானி காரியாலயத்தின் நிதி அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால்  (UNDP)  சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் (CFCD) ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலைபேறான மீள் குடியேற்றத்திற்கும் மீள் ஒருங்கிணைவுக்குமான விரிவாக்கப்பட்ட ஆதரவு (EDRR) திட்டத்தின் ஊடாக 21.09.2023 அன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முதற் கட்டமாக 8 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ. சிறி ஆகியோருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் நிகழ்ச்சித் திட்டங்களின் பொறுப்பதிகாரி Mr. George Evans (Head of Programmes, British High Commission, Colombo), Mr.Thusandra Vijayanathan (Deputy Programme Manager, British High Commission, Colombo), UNDP உத்தியோகத்தர்கள், CFCD உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், IOM உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுடன் இத் திட்டத்தின் ஒரு பகுதியாகிய அனுபவக் கற்கை ஊடாக NVQ தரச் சான்றிதழ் பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது NAITA நிறுவனத்தின் ஊடாக  மேற்கொள்ளப்பட்டது. அதில் NAITA நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் கலந்து கொண்டார். அத்துடன் NAITA நிறுவனத்தில் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவவர்களுக்கான NVQ தர  சான்றிதழ் வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்