Thu. May 2nd, 2024

தேசிய மட்ட கணித போட்டி வடமாகாண மாணவர்கள் சாதனை

அகில இலங்கை தேசிய மட்ட கணித போட்டியில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரிவினர் முதலாமிடத்தையும், கனிஸ்ட பிரிவினர் இரண்டாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாண்டுக்கான அகில இலங்கை தேசிய மட்ட கணிதப்போட்டி மீப்பேயிலுள்ள கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் கடந்த 21,22ம் திகதிகளில் நடைபெற்றது. குறித்த தேசியமட்ட போட்டியில் கனிஷ்டபிரிவு(தரம் 6,7,9) வடக்குமாகாண அணி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது. இதில் யாழ்ப்பாணம், வலிகாமம், கிளிநொச்சி தெற்கு, வவுனியா தெற்கு, துணுக்காய், மன்னார் வலய பாடசாலைகளை  சேர்ந்த 9 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.கிழக்கு மாகாண அணி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
22/09/23 வெள்ளி நடைபெற்ற சிரேஸ்ட பிரிவுக்கான போட்டியில் வடமாகாண அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டது. இவ்வணியில் யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி தெற்கு, வவுனியா தெற்கு வலய பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 12 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இப்போட்டியில் ஊவா மாகாண அணி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்