Thu. May 2nd, 2024

வாக்கு கேட்பது தொடர்பாக அரச அலுவலகர்களுக்கான அறிவித்தல்

அரச அலுவலகங்களினுள் அல்லது நிறுவனங்களினுள் வாக்கு இரந்து கேட்பதையும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அரச அல்லது மாகாண சபை அலுவலகமொன்றில் அல்லது அரச பாடசாலையொன்றில், உள்ளூர் அதிகார சபையொன்றில், வேறு அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது நியதிச்சட்ட சபையொன்றுக்குச் சொந்தமான நிறுவனமொன்றில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் சார்பாக வாக்கு இரந்து கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும் வேறு அவ்வாறான கருமங்களை மேற்கொள்வதும் கூட்டங்களை நடாத்துவதும் தடை செய்யப்பட்டதாகும். ஆதலால், அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்வது அத்தியாவசியமானது என்பது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அரசியல் பெயற்பாட்டாளர்களுக்கும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்களுக்கும் இத்தால் அறிவிக்கப்படுகிறது.
தமது நிருவாகத்தின் கீழிருக்கின்ற அரசின் அல்லது மாகாண சபை அலுவலகங்களில் அல்லது பாடசாலைகளில் அல்லது உள்ளுர் அதிகார சபைகளில் அல்லது அரச நிறுவனங்கள். கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளில் இவ்வாறான சட்டமுரணான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவகாசம் அளிக்காதிருத்தல், குறித்த அரச நிறுவனங்களின் தலைவர்களினதும் உப அலுவலகங்களின் தலைவர்களினதும் பொறுப்பாகும்; இது சம்பந்தமாக தாபன் விதிக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:4, 25 பந்திகள் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.
தேர்தல் காலப்பகுதியினுள் அரசுக்கு அல்லது அரச கூட்டுத்தாபனங்களுக்கு அல்லது நியதிச்சட்ட சபைகளுக்குச் சொந்தமான அசையா அல்லது அசையும் ஆதனம் எதனையும் கட்சிகளினதும், குழுக்களினதும், வேட்பாளர்களினதும் ஊக்குவிப்புக்கு அன்றேல் பாதிப்புக் காரணமாக அமையக்கூடிய விதத்தில் அல்லது சுதந்திரமானதும் நீதியானதுமான ஒரு தேர்தலை நடாத்தும் நோக்கத்திற்கு இடையூறாக அமைகின்ற விதத்தில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 104ஆ (4)(அ) இன் ஏற்பாடுகளைப் பின்பற்றி தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட பணிப்புகள் அடங்கிய 2313/32 ஆம் இலக்க, 2023,01,04 ஆம் திகதிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானியில் குறிப்பிடப்படும் விடயங்கள் மீதும் கவனம் செலுத்துமாறு இத்தால் அறிவிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்