Mon. May 6th, 2024

வாகனத்துடன் மோதுண்டு பரிதாபமாக பலியான 20 கங்காருக்கள்- ஆஸ்திரேலியாவில் கொடூரம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் நடந்த அதிர்ச்சியான விபத்தில் 20 கங்காருக்கள் ஒரு வாகனத்தால் மோதுண்டு இறந்ததாக நம்பப்படுகிறது. இதில் குட்டி கங்காருக்களும் அடங்கியுள்ளன எனப்து மேலும் அதிர்ச்சிகரமான சம்பவமாகவுள்ளது .

கிராமப்புறபகுதியான துரா கடற்கரையில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கொல்லப்பட்ட கங்காருக்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளின் புல் தரையில் இறந்து கிடந்துள்ளன . ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்தபோதே அப்பகுதி மக்களுக்கு இந்த சோகமான விபத்து சம்பவம் தெரியவந்ததுடன் , இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய மூன்று குட்டி கங்காருக்களை வனவிலங்கு மீட்பு குழுவின் உதவியுடன் மீட்டுள்ளார்கள். வனவிலங்கு மீட்ப்பு குழுவின் அதிகாரி ஒருவர் இந்த விபத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் தனது 20 ஆண்டு சேவையில் இந்த மாதிரி படுகொலை போன்ற எதையும் பார்த்ததில்லை என்று கூறினார்.

“இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது , கங்காருக்கள் தங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாகும், அவைகள் என்றென்றும் இங்கேயே வாழ்ந்து வருகின்றன . இங்குள்ளவர்கள் அனைவரும் கங்காருக்கள் தெருவில் மேலேயும் கீழேயும் துள்ளிக் குதித்து திரிவதை பார்த்து பழகிவிட்டார்கள், மேலும் அவைகளுக்காகவே வீதியில் மெதுவாகச் செல்கிறார்கள். யாராவது இப்படி ஒரு படுகொலை செய்வார்கள் என்று நம்ப முடியாதுள்ளது என்று கூறினார்கள்
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்