Sun. May 19th, 2024

அயல்வீட்டு இளைஞன் அட்டாகாசம் , பொலிஸார் பக்கசார்பாக செயற்படுவதாக போலீஸ் மற்றும் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கொக்குவில் கிழக்கு ரயில் நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் இருவாரங்களுக்கு முன்னர் அத்துமீறி அட்டூழியத்தில் ஈடுபட்ட அயல்வீட்டு இளைஞனுக்கு பொலிஸார் துணை நிற்பதால் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகமதிலும் , தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்ட குடும்பம் முறையிட்டுள்ளார்கள். இந்த தாக்குதலின் பொழுது இளைஞன் போதையில் இருந்ததாக தகவல்கள் வெளிவந்திருந்தது
தாக்குதல் நடத்திய அயல்வீட்டு இளைஞன் தற்பொழுது சுதந்திரமாக நடமாடுவதால், தமக்கு அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாகவும் தெரிவித்து அந்தக் குடும்பம் தற்பொழுது தங்கள் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த இரண்டு வாரங்களாகத் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக தெரிவித்தனர்

அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்படிருப்பதாவது , எங்களுடன் மகனும் மகளும் வசித்து வருகின்றனர் . மகன் ஆசிரியராகவுள்ளார் . மகனும் மகளும் வீட்டில் இல்லாதவேளை , அயல்வீட்டு பிரசாத் என்ற இளைஞன் எனது வீட்டுப் படலை ஏறிக் குதித்து வீட்டுக்குள் வந்து என்னையும் கணவரையும் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்தார்.அத்தோடு விட்டுக்கு முன்னால் நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்து விட்டு சென்றார் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்