Sat. May 4th, 2024

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்க உதைபந்தாட்டம் யங்ஹென்றீசியன் அரையிறுதிக்குள்

வடமாகாண உதைபந்தாட்ட போட்டியில் இளவாலை யங்ஹென்றீசியன் அணி கோல் மழை பொழிந்து அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட இவ்வருடத்தின் முதலாவது மாகாண தொடர் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் இளவாலை யங்ஹென்றீசியன் அணியை எதிர்த்து கிளிநொச்சி உருத்திரபுரம் அணி மோதியது. ஆட்டத்தில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இளவாலை ஹென்றிசியன் அணி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்