Sat. Apr 27th, 2024

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழாவும் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு மாலைசந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் தெரிவு செய்யப்பட்ட 11 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும்,  850 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்,  550 பேருக்கு பயன்தரு மரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

யா/ஹாட்லிக் கல்லூரியின் பகுதித் தலைவரும் கணபதி அறக்கட்டளையின் பணிப்பாளருமான வ.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலாளர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜனனி லதர்ஸன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் க.கிருஸ்ணகுமார், யா/கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் பா.கோணேஸ்வரராஜா ஆகியோரும்,
கெளரவ விருந்தினர்களாக சமூக சேவையாளரும்,  ஓய்வுநிலை இங்கிலாந்து பேராசிரியருமான சி.சண்முகலிங்கம்,  சமூக சேவையாளர் திருமதி இந்திராணி பாஸ்கரன்,  Green Solar Helding Lanka (pvt) Ltd முகாமையாளர் உ.கோகுலன் , அல்வாய் கிழக்கு கிராம சேவையாளர் எஸ்.பிரதீபன்,  அல்வாய் தெற்கு கிராம சேவையாளர் ஆர்.யாதவன் ஆகியோரும் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகள்,  கற்றல் உபகரணங்கள் மற்றும் பயன்தரு மரங்களை வழங்கி வைத்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்