Fri. May 3rd, 2024

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சூடுபிடிக்கும் பிரச்சினைகள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தமிழ் கூட்டமைப்பின் பாராமுகம் தமது கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர் முதல் ஒரு வருடம் பிரதேச சபையின் தவிசாளர் ஆகா கடமையை ஆற்றுவார் எனவும் அடுத்த இரண்டாவது வருடம் அடுத்த உறுப்பினருக்கு இடம் கொடுப்பதாகவும் தமிழிரசு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவது வருடம் தொடங்கியும் உறுதிமொழி வழங்கி அவருக்கு தவிசாளர் பதவி கொடுக்கப்படவில்லை. அதேபோல் போனஸ்சில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரும் ஒரு வருடம் முடிந்து தொடர்ந்தும் பதவியில் வகித்துக் கொண்டு இருக்கின்றார். உறுதிமொழி பெற்றுக்கொண்ட  உறுப்பினர்கள் மிகவும் வேதனைப் படுகிறார்கள். இதனால்  கட்சிக்குள் உறுப்பினர்களிடையே உட்பூசல் சூடுபிடிக்கும் தருவாயில் உள்ளது.  நம்பிக்கையில்   தீர்மானம்  கொண்டுவருவதற்கு இரண்டரை வருடம் எப்போ முடியும் என உறுப்பினர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவர் தலையிட்டு சபையின் தவிசாளர் உப தவிசாளர் போன்றவர்களை தெரிவு செய்வதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கைகளையும் கட்சி மேலிடம் எடுக்கவில்லை என்ற ஆதங்கம் உறுப்பினர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்