Mon. Apr 29th, 2024

யாழ் மாவட்ட ஹெக்கி சங்கத்தின் புதிய தலைவராக ஜி.டி.மதியழகன்

யாழ் மாவட்ட ஹெக்கி சங்கத்தின் புதிய தலைவராக ஜி.டி.மதியழகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட ஹெக்கி சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக ஜி.டி.மதியழகன், செயலாளராக ஆர்.ராஜேஸ்வரன், பொருளாளராக எஸ்.பிரதாப், உப தலைவர்களாக சி.ஏ.அரவிந்தன், கே.கஜேந்திரன், பி.நேசறூபன் ஆகியோரும் உப செயலாளராக எஸ்.சுரேந்திராவும் தெரிவு செய்யப்பட்டனர். யாழ் மாவட்டத்தில் 1980களில் ஹெக்கி சங்கம் காணப்பட்ட போதிலும், காலப்போக்கில் வலுவிழந்து காணப்பட்டது. அதன் பின்னர் 2002ம் ஆண்டு முதல் ஜி.டி.மதியழகன் அவர்களால் யாழ் மாவட்டத்தில் ஹொக்கி சங்கம் மீளுருவாக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்