Tue. Apr 30th, 2024

யாழ் மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் வடமாகாண பிரதம செயலாளர் அறிவிப்பு

உடகட்டுமான ரீதியாக யாழ்.மாவட்டம் பல பிரச்சனைகளை எதிா்கொண்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட திட்டமிடல் ஊடாக அபிவிருத்தி செய்ய  வேண்டும்
வடக்குமாகாண பிரதம செயலாளா் சமன் பந்துலசேனா தெரிவித்துள்ளார். 
வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு முதல் வடக்கில் வாழும் இளைஞா்களை  முன்கொண்டு செல்வதற்கு அனைத்து அரசாங்க பிாிவினரும்  முதன்மையான  திட்டங்களை முன்வைத்து செயலாற்ற வேண்டும். அதன் மூலமே உண்மையான அபிவிருத்திகளை  எய்தலாம் என தொிவித்தாா்.  வடக்கு மாகாண பிரதம செயலாளா் எஸ்.எம். சமன் பந்துல சேனா. 
வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்திற்கான 10 ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டம்  ( 2021-2030)  தயாாிப்பதற்கான நடவடிககைகளை  வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்திருந்தது.
இதில் யாழ்.மாவட்ட 17 உள்ளுராட்சி சபை தலைவா்,செயலாளா் மற்றும் 15 பிரதேச செயலாளா் பிரிவினைச்  சோ்ந்த பிரதேச செயலாளா்கள் பங்குதாரா்களுக்கான 10 ஆண்டுத்திட்டம்“ தயாாிப்பதற்கான  விசேட கூட்டம் யாழ். வலம்புாி ஹோட்டலில்  நகர அபிவித்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளா் டி.பி.எஸ்.கே. திசநாயக்கா  17.11.2021 இடம்பெற்றது.
 
இதில் கலந்து கொண்ட வடமாகாண பிரதம செயலாளா் எஸ்.எம். சமன் பந்துலசேனா மேலும் தொிவிக்ககையில், யாழ். மாவட்டம் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது – பிரச்சசனைகள் அதிகம் உள்ள மாவட்டமாக  என்னால் இனம்காணப்பட்டுள்ளது. ஒருபுறம் பாாிய வீதி அபிவிருத்தி மறுபுறம் பொருத்தமான வடிகான்கள், கால்வாய்கள், மதகுகள் சீாின்மைபாலும் பொருத்தமற்ற உட்கட்டுமானங்களாலும்  முழுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நான் நோில் பாா்த்துள்ளேன்.
மாவட்ட அபிவிருத்தி திட்டம் (Jaffna Development Plan  2021 – 2030) தயாாிக்கப்பட வேண்டும்  ஆனால் அத்திட்டங்கள் உாிய காலங்களில் பொருத்தமான தொழில் நுணுக்க முறைகளில் செயல்படுத்தி வெற்றிகாணவேண்டும்.
ஆனால் யுஎன்டிபி நிறுவனம் யாழ்.மாவட்ட செயலகத்தடன் இணைந்த வகையில் 2018 இல்  யாழ்.மாவட்டத்தில் பேண்தகு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக நான்கு பிரதான பிாிவுகளில்  2018 – 2022 க்கான 5 ஆண்ட மாவட்ட அபிவிருத்தி திட்டம் பெரும் செலவில் முன்னெடுகட்கப்பட்டு  இதுவரை எந்த அபிவிருத்தியும் எய்தப்படாத நிலையை நான் உணருகின்றேன். எனவே தற்போது  10 ஆண்டுத்  திட்டதை  வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கின்றது அதற்கு என்னுடைய புரண ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்.
தயாாிக்கப்டும் ஒவ்வொரு திட்டங்களும் இந்த மக்களை சென்று அடையவேண்டும் என்ற  நோக்குடன் பணியாற்றுகின்றேன் அந்த இலக்கினை எட்டுவதற்காக ஒருங்கிணைந்த அடிப்படையில் இளைஞா்களின்   மனங்களை வென்று மாவட்ட திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றாா்.
 
இந் நிகழ்வில்  யாழ்.மாவட்ட அரசாங்க அதிபா் க.மகேசன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தந்திரோபாய திட்டமிடல் பணிப்பாளா் திருமதி. ஆா்.எல்.பி.பி. நவரட்ண, வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளா் சிரேஸ்ட.ட திட்டமிடலாளா் திருமதி கே. ஜீவகன், திட்டமிடலானா்களான பி.கோகுலன். செல்வி. எஸ்.தாரகா, திருமதி.ரி .சுரேஸ்குமாா் ஆகிகோா் கலந்து கொண்டு  சிறப்புரைகளை வழங்கினா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்