Tue. May 21st, 2024

புதிய சுற்றுநிரூபங்களை கவனமெடுக்காது செயற்படும் நெல்லியடி பொலீஸார்.

புதிய சுற்றுநிரூபங்களை நெல்லியடி பொலீஸார் கவனத்தில் கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய அடையாள அட்டை காணாமல் போனமை தொடர்பாக முறைப்பாடொன்றை செய்யும் போது எங்கு காணாமல் போனதோ அங்கு அருகில் உள்ள பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தல் வேண்டும். நிரந்தர வதிவிட பொலீஸ் நிலையத்தில் செய்ய வேண்டும் என்றில்லை. காணாமல் போன 14 நாட்களை கடந்து முறைப்பாடு செய்ய வேண்டும் என்றில்லை உடனடியாக முறைப்பாடு செய்யலாம். அத்துடன் முறைப்பாடு செய்ய கிராம உத்தியோகத்தர்களின் உறுதிப்படுத்திய கடிதம் அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய அடையாள அட்டை தொலைந்து போன முறைப்பாடு பதிவு செய்யும் போது தற்போதும் கிராம அலுவலகர் கடிதம் தேவை என நெல்லியடி பொலீஸார் குறிப்பிடுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்