Sat. Apr 27th, 2024

யாழ்ப்பாண பல்கலைக்கழக வலைப்பந்தாட்டத்தில் கலைப்பீட அணி சம்பியன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் கலைப் பீட மாணவிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கலைப்பீட அணியை எதிர்த்து இணைந்த சுகாதார விஞ்ஞான அலகு அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போராடினர். இதனால் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் 6:6 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர்.
இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலைப்பீட அணியினர் ஆட்ட நேர முடிவில் 19:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
3ம் இடத்தை சித்த மருத்துவ பீட அணியினர் பெற்றுக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்