Sat. May 4th, 2024

யாழ்ப்பாண கல்வி வலயத்தினால் சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம்

யாழ்ப்பாண கல்வி வலயத்தினால் சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், சிறப்பு விருந்தினராக நல்லூர் நோர்த் கோல்டன் ஸ்ரார் லயன்ஸ் கழகத் தலைவர் செல்வி சி.பூபதி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்