Sat. Apr 27th, 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கரம் தொடரின் முடிவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்களுக்கும் இடையிலான திறந்த பிரிவினருக்கான ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு ஆட்டங்களின் கரம் தொடர் அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் 1ஆம் இடத்தை தொழில் நுட்ப பீட மாணவி ஆர். பவதாரணி, 2ஆம் இடம் கலைப் பீட ஆர். ரஜிதா, 3ஆம் இடம் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் எச்.எம்.எஸ். நிமேசிகா ஆகியோரும் பெற்றனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் 1ஆம் இடத்தை விவசாய பீட மாணவன் வி.கிருசாந்தன், 2ம் இடத்தை விஞ்ஞான பீட மாணவன் ரி.எம்.ரி.பி.திலகரத்ன, 3ஆம் இடத்தை விஞ்ஞான பீட மாணவன் எம். றேகன் ஆகியோரும் பெற்றனர்.
பெண்களுக்கான இரட்டையர் ஆட்டத்தில் 1ம் இடத்தை ஆர். பவதாரணி, ஆர். ரஜிதா,
2ஆம் இடத்தை ஜீ. விஜேசிறி, எம். பானுயா, 3ம் இடத்தை  எச்எம்எஸ். நிமேசிகா, ஏ. நண்டசிறி ஆகியோரும் இடத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான இரட்டையர் ஆட்டத்தில் 1ஆம் இடத்தை டி. ஏ.கே. உடயங்க, ரி.எம்.ரி.பி. திலகரட்ண, 2ஆம் இடத்தை எம் ராகுல்,  ட.பி.எம். லியனகே, 3ஆம் இடத்தை எம்.ஏ.ஏ. இஷான், எம் ரேகன் ஆகியோரும் பெற்றனர்.
கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் 1ஆம் இடத்தை டி. ஏ.கே. உடயங்க, எச். எம். எஸ். நிமேசிகா, 2ஆம் இடத்தை எம் ராகுல், எம். ராகுல், 3ஆம் இடத்தை ஆர். றொஷான், ஆர். தூரிகா ஆகியோரும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்