Tue. Apr 30th, 2024

யாழில் இருந்து கொழும்பு சென்ற பஸ் வவுனியாவில் திருப்பி அனுப்பப்பட்டது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக இந்த பஸ் திருப்பி அனுப்பப்பட்டது என்று தெரியவருகிறது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும் 19 ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பஸ் மற்றும் தொடருந்து சேவைகளுக்கு இன்று தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதியளிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு பஸ் ஒன்று கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தியதில் பஸ்ஸில் பயணித்தவர்களில் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ள நிலையில் இந்த திருப்பி அனுப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்