Tue. Apr 30th, 2024

யங்ஹென்றீசியன் நிதானமான ஆட்டம் இறுதிக்குள் நுழைந்தது

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் றேஞ்சஸ் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் இளவாலை யங்ஹென்றீசியன் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டம் நேற்று சனிக்கிழமை குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
அரையிறுதி ஆட்டத்தில் இளவாலை யங்ஹென்றீசியன் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பமாகி 12வது நிமிடத்தில் ஞானமுருகன் அணி வீரர் சர்மிஜனன் முதலாவது கோலைப் பதிவு செய்தார். ஆனால் யங்ஹென்றீசியன் அணி வீரர்கள் குழப்பமடையாமல் தமது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20வது நிமிடத்தில் யங்ஹென்றீசியன் அணி வீரர் யூட் சுபன் ஒரு கோலைப் பதிவு செய்து ஆட்டத்தை சமநிலைபடுத்தினர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர்.
இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் ஆட்டம் ஆரம்பமாகி 31வது நிமிடத்தில் யங்ஹென்றீசியன் அணி வீரர் மலரவன் சிறப்பான கோலைப் பதிவு செய்தார். அதன் பின்னர் மயிலங்காடு ஞானமுருகன் அணியின் ஆட்டம் அனல் பறக்கும் வேகத்தில் தமது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38வது நிமிடத்தில் ஞானமுருகன் அணிக்கு நேர் உதை கிடைத்தது.அதனை அவ்வணி வீரர் சசீவன் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. அதேபோல் அதே அணி வீரர் வகின்ஷன் உதைத்த பந்தும் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இவ்வாறு பல சந்தர்ப்பங்களை ஞானமுருகன் அணியினர் கோலாக்க தவறி விட்டனர். ஆட்டம் முடிவடைவதற்கு ஒரு நிமிடம் இருக்கும் போது யங்ஹென்றீசியன் அணி வீரர் அருள் ஜோசப் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் இளவாலை யங்ஹென்றீசியன் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
றேஞ்சஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் உ.வினோத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் உப தலைவரும், பொறியியலாளருமான
செ.தர்மிகன் கலந்து சிறப்பித்தார். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக  அன்ரனி டிலக்ஸன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்