Thu. May 2nd, 2024

மைத்திரிக்கு ஆப்படித்த உச்சநீதிமன்றம் , மே 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

றோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் பொழுதே உச்சநீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியை மே மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தது.
உரிய நெறிமுறைகளை பின்பற்றாமல் மரண தண்டனை குற்றவாளி ஸ்ரமந்தா ஜூட் ஜெயமஹாவை மைத்திரிபால பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்திருந்தார்.
உரிய நெறிமுறைகளை பின்பற்றி நீதிமன்ற அனுமதி மற்றும் அமைச்சரவை அனுமதி பெற்றே ஒரு மரண தண்டனை கைதியை விடுதலை செய்யமுடியும். இந்த நெறிமுறைகள் எதனையும் பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக் மைத்திரிபால விடுதலை செய்துள்ளார் என்று பல்வேறு அமைப்புகளும் குற்றம் சுமத்திய நிலையில் பெண்கள் மீடியா கூட்டணி எனும் அமைப்பு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
இதன் மூலம் இரண்டாவது தடைவையாக மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் குட்டுவாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்