Thu. May 2nd, 2024

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரவுள்ள மஹாவம்சம், பௌத்தத்தை பரப்ப புது முயற்சி

கிமு 600 முதல் இலங்கையின் வரலாற்றுடன் தொடர்புடைய மகாவம்ச எனும் நூல் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது. பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை செய்யவுள்ளதாக அமைச்சின் பணிப்பாளர் அனுஷா கோகுல தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் டிசம்பர் 9 ஆம் தேதி பட்டாரமுல்லாவின் சேட்சிரிபயாவின் இரண்டாவது மாடியில் மகாவன்ச செயலகம் அமைக்கப்பட்டது.

மஹாவம்சவின் ஒன்று முதல் ஆறு தொகுதிகள் தமிழிலும் , மூன்று முதல் ஆறு தொகுதிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

கி.மு 600 முதல் கி.பி 301 வரையிலான நாட்டின் வரலாற்றை விவரிக்கும் தொகுதி 1 மகானாம மகா தேரரால் எழுதப்பட்டது, கி.பி 301 மற்றும் 1815 க்கு இடையில் தொகுதி மூன்று தேரர்களால் எழுதப்பட்டது, என்றும் மூன்றாவது தொகுதி கி.பி 1815 மற்றும் 1936 க்கு இடையில் யாகிராலா பன்னானந்த தேரரால் எழுதப்பட்டது மேலும் 4, 5 மற்றும் ஆறு தொகுதிகள் அமைச்சின் ஆசிரியர் குழுவால் நிறைவு செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்