Fri. Apr 26th, 2024

முறையான ஒழுங்குபடுத்தலில் எரிபொருள் விநியோகம் – தயாரூபனுக்கு புகழாரம்

கரவெட்டி பிரதேச செயலகத்தின் முறையான ஒழுங்குபடுத்தலினால் மக்கள் குழப்பமின்றி எரிபொருளை பெற்றுச் சென்றுள்ளனர்.

நேற்று உடுப்பிட்டி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் (புறாப்பொறுக்கி) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது.
சுமார் 4 நாட்களாக எரிபொருளுக்காக பலரும் காத்திருந்தனர்.
இதனால் வரிசைகள் குழப்பப்படாமல் இருப்பதற்கு கரவெட்டி பிரதேச செயலாளர் தயாரூபன், கரவெட்டி பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியோடு வரிசை இலக்கங்கள் வழங்கப்பட்டு குழப்பமின்றி எரிபொருள் வழங்கப்பட்டது. இவ்வாறு ஏனைய நிரப்பு நிலையங்களிலும் முறையான ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்