Tue. Apr 30th, 2024

மன்னாரில் ‘கொரோனா வைரஸ்’ தொற்றை கட்டுப்படுத்த விசேட ஏற்பாடு-

நாடளாவிய ரீதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ‘கொரோன வைரஸ்’   அச்சுறுத்தல் தொடர்பாக  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விசேட ஏற்பாடும்  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில் மன்னார் நகர சபை மற்றும் தேசிய நீர்வழங்கள் அதிகாரசபையின் ஒத்துழைப்பில் மெசிடோ நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமை இன்று வெள்ளிக்கிழமை (20) மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் நீர்தாங்கிகள் பொருத்தப்பட்டு மக்கள் தங்கள் கை மற்றும் உடலை சுத்தப்படுத்தி சுகாதாரமான முறையில் பராமரிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கொரோன தொடர்பான சுவரொட்டிகள் மக்கள் பார்வைக்காக பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விசேட  நிகழ்ச்சித் திட்ட அறிமுக நிகழ்வில்  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன ஊழியர்கள் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் மத்தியில் முன்னுதாரணமாக செயல் பட்ட  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன ஊழியர்களுக்கு மன்னார் மாவட்ட மக்களும்,சமூக ஆர்வளர்களும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்