Sun. May 5th, 2024

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் மறவன்புலவு காற்றாலை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

மறவன்புலவு காற்றாலை அமைப்பது தொடர்பாக பல்துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை அறியும் சிறப்பு கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலைமையில் 7/1/2020 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு யாழ் மாவட்ட செயகத்தில்
இடம் பெற்றது

இந்த நிகழ்வில் அரச அதிபர்
நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மத்திய சுகாதார அதிகாரசபை அதிகாரிகள் சாவகச்சேரி பிரதேச சபை அதிகாரிகள்  பிரதேச செயலக அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் யாழ் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கமக்கார அமைப்பின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மறவன்புலவு மேற்கு பகுதியில் குடியிருப்புக்குள் அமைந்துள்ள  காற்றாலை அகற்றுவதெனவும் உள் வீதிகளால் வரும் மின்சார கம்பங்களை அகற்றுவதெனவும் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதெனவும் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மின்சார கம்பங்களை அதே காணிக்குள் சிறிதுதூரம் அகற்றுவதெனவும் காற்றாலை நிறுவனத்தினர் தெரிவித்தனர்

ஆனால் இதற்கு சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ நிமலரோகன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் குடியிருப்புக்குள் இருக்கும் இரண்டு காற்றாலை கம்பங்களும் அகற்ற வேண்டும் என இறுதியான முடிவாக கேட்டுக் கொண்டனர்.

இதற்கு  சரியான முடிவு தமக்கு வழங்கப்படவில்லை காற்றாலை நிறுவனத்தினர் ஒரு காற்றாலை மட்டும் அகற்றுவதெனவும் மற்றைய காற்றாலையை சிறிது தூரம் அதே காணிக்குள் அரக்குவதெனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நாங்கள் உடன்பாடில்லை என்று தெரிவித்தோம் அதற்கு சாதகமான பதில் எமக்கு வழங்கப்படவில்லை என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ நிமலரோகன் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்