Sat. May 4th, 2024

பாடசாலைகளில் அனைவருக்கும் விளையாட்டு என்னும் செயல் திட்டத்தை  உருவாக்க வேண்டும்- ப.தர்மகுமாரன்

பாடசாலைகளில் அனைவருக்கும் விளையாட்டு என்னும் செயல் திட்டத்தை  உருவாக்க வேண்டும்    உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் விளையாட்டு கட்டாயமானது என்னும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். யாழ் பல்கலைகழகத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியின் 25ஆவது ஆண்டு நிறைவு பழைய மாணவர்களால்  சரஸ்வதி மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விழுவது எல்லாம் விதைகளும் அல்ல, விதைகள் எல்லாம் விருட்சமாவதுமில்லை. ஆனால் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி விதையாக விழுந்து இன்று விருட்சமாக நிற்கிறது. இதனால் விளையாட்டு, புதுப்பொழிவுடன் எங்கும் வியாபித்துள்ளது. எனவே அதனை சரியவிடாது தொடர்ந்து கிராமப்புறங்களை நோக்கிய விளையாட்டு எழுச்சித் திட்டத்தின்னை முன்னகர்த்த கிராம பாடசாலைகளில் எல்லா மாணவர்களையும் விளையாட்டில் பங்கு கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அத்துடன்  உடற்கல்வி ஆசிரியர்களின் ஆற்றலையும் வினைதிறனையும் மேம்படுத்த வேண்டும். ஏனெனில் பாடசாலைகளில் இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் 60வயதிலேயே ஒய்வு பெறுவார்கள். அதுவரை அந்த பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி உடற்கல்வி ஆசிரியர்கள் துரிதமாகவும் வினைதிறனாகவும் செயலாற்றுதல் அவசியம். இந்த வெள்ளிவிழா மூலம் புதிய உத்வேகத்துடன் பயணிக்க முயல்வதுடன், புதிய புதிய விடயங்களை அறிந்து மாணவர்களின் வினைதிறனான ஆற்றலை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு உடற்கல்வி  ஆசிரியரும் இலட்சியத்துடன் பயணிக்க வேண்டுமென  சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்