Fri. May 3rd, 2024

பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி  கற்கைநெறிகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 

இனி வரும் நாட்களில் உயர்தர கல்விக்கு பின்னர் பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி  கற்கைநெறிகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் தொடக்கம் இந்த  கற்கைநெறி அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இந்த ஆண்டு பாடசாலை கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில மொழியுடன் கூடிய தொழிற்கல்வி தொடர்பான நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு அறிவு கொண்ட திட்டம் பெப்ரவரி முதல் வழங்கப்படவுள்ளது.

உயர்தரத்தை பூர்த்தி செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்த தொழிற்பயிற்சி திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஜனவரி 2024 இல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெப்ரவரி 9, 2024க்கு முன் இந்தத் திட்டத்திற்குப் பதிவு செய்யலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்