Mon. Apr 29th, 2024

பசிலுடன் சிவாஜிலிங்கம் போட்ட டீல்!! -சிங்கள ஊடகம் தகவல்-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடனான டீல் மூலமே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்து கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளும் பொறுப்பை, பசில் ராஜபக்ச, சிவாஜிலிங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் சிவாஜிலிங்கத்தின் இந்த பிரசாரத்தினால், சிங்கள மக்களை தூண்டி அந்த சாதகத்தை கோத்தபாயவுக்கு பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

அத்துடன் சிவாஜிலிங்கம் 50 ஆயிரம் வாக்குகளை பெறுவார் என கணக்கிட்டுள்ள பசில், அவருடன் இணைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிபால அமரசிங்கவுக்கு வழங்கியுள்ளதாகவும் சிறிபால அமரசிங்க, பசில் ராஜபக்சவின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. சிறிபால அமரசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்