Tue. Apr 30th, 2024

நெல்லியடி நகரப்பகுதியில் கான் வாய்க்கால் கழிவுகள் அகற்றாததால் நுளம்பு தாக்கம்

நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள காண் வாய்க்கால்களில்  கழிவுகள் அகற்றாததால் வாய்க்கால்களில் இருந்து நுளம்புகள் வெளியேறுவதால் வியாபாரிகள் பொதுமக்கள் நுளம்பு தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை வீதி அதிகாரசபைக்கு தெரியப்படுத்தி வீதி அதிகார சபையின் மூலமாக துப்பரவு செய்திருக்க வேண்டியது. அவர்கள் செய்யாத காரணத்தினால் நுளம்பு தாக்கத்தினால்  வியாபாரிகள் பொதுமக்கள் என பலர் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர் உடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையும் வீதி அதிகார சபையும்  சேர்ந்து துப்புரவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அறிவித்தும் இதுவரையில் துப்புரவு செய்யப்படவில்லை என கூறினார். மழைகாலம் ஆனபடியால் துப்புரவு செய்யப்படாவிட்டால் இன்னும் அதிகமானவர்கள் நுளம்பு தொல்லையினால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என பொதுமக்கள் விசனம் கொண்டுள்ளார்கள். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடன் வாய்க்கால்களைகவனம் செலுத்தி துப்பரவுசெய்வதோடு புகையை ஊட்டுவதிலும்  கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்