Sun. May 5th, 2024

நெல்லியடியில் முகக்கவசம் போடாதவரை மோட்டார் சைக்கிளில் துரத்தி பிடித்த பொலிஸ்

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில்,  கிராமங்கள் தோறும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக  ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கி செல்லும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பொழுது   நெல்லியடி நகரப்பகுதியில் முகக் கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்ததை அவதானித்த  போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அவர் மிக வேகமாக சென்று புதிய சந்தைக்குள் சென்று உள்ளார். நெல்லியடி பொலிசார் வேகமாக சந்தைக்குள் புகுந்து அவரை கைது செய்து நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று  பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி இடம் ஒப்படைத்தார்கள்.

இதன் பொழுது கருத்து தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, கொரோனா சம்பந்தமாக முகக் கவசம் அணியாமல் சென்றால் என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பற்ற முறையில் நடப்பதினால் ஏனைய பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறீர்கள் எனவும், கோரோனோ  நாளடைவில் வேகமாக பரவி வருவது உங்களுக்கு தெரியாதா என அறிவுரை வழங்கியதுடன், முகக் கவசம் இல்லாமல் செல்லக் கூடாது எனவும், சுகாதார உத்தியோகத்தர் உடைய அறிவுரைகளைப் பின்பற்றுமாறு அவருக்கு எச்சரிக்கை செய்து  விடுவிக்கப்பட்டார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்