Sat. Apr 27th, 2024

நியூஸிலாந்து அணிக்கு எதிராக முதலாவது போட்டியில் வெற்றியை பதிவு செய்த இலங்கை

காலியில் இடம்பெற்ற இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டால் வென்றுள்ளது.
முதலாவது மற்றும் இரண்டாவது இன்னிக்ஸ் இல் நியூஸிலாந்து அணி முறையே 249, 285 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஸ் டெய்லர் அதிகப்படியாக முதல் இன்னிக்ஸ்ல் 86 ஓடங்களையும் , வட்லிங் அதிகப்படியாக 77 ஓட்டங்களை இரண்டாவது இன்னிங்ஸ்லும் பெற்றனர்.பந்து வீச்சில் தனஞ்சய மற்றும் லக்மால் முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுகளை முதலாவது இன்னிக்ஸ்லும் , எம்புல்தேனிய 4 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிக்ஸ்ழும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிக்ஸ்ல் சகல விக்கெட்டுகளையும் இழந்தது 267 ஓட்டங்களை பெற்றது. இதில் டிசக்வெல்ல மற்றும் மத்தியூஸ் முறையே 61 மற்றும் 50 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்ல் வெற்றி பெற 268 ஒட்டங்கள் என்று இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் தலைவர் கருணாரத்ன மற்றும் த்ரிமானே நிதானமாக ஆடி முதல் விக்கெட் இணைப்பு ஆட்டமாக 161 பெற்றனர்.ஆட்முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புதான் நிர்ணயிக்கப்பட 268 ஓட்டங்களை பெற்றது.. இதில் அதிகபடசமாக அணித்தலைவர் கருணாரத்ன 122 ஓட் ங்களை பெற்றுக்கொண்டார். இதன் மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற நிலையில் இலங்கை முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற இருக்கிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்