Fri. May 10th, 2024

பராமரிப்பின்றி இருக்கும் நெல்லியடி பஸ் தரிப்பிட மலசல கூடம்

நெல்லியடி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்திற்கு உரிய பராமரிப்பு இன்மையால் துப்பரவின்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக மலசல கூடம் புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் மலசல கூடம் தண்ணீர் வசதிகள் முறையாக அமைக்கப்படாமல் உரிய பராமரிப்பு வசதிகள் ஏற்படாததையிட்டு பொதுமக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர். அத்தோடு பஸ் தரிப்பு நிலையத்தில் துர்நாற்றம் எழுவதால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரதேசத்தில் நடைபெறும் பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதற்கு பிரதேச சபைக்குச் செல்லும் பொழுது அவரை பல தடவைகள் பிரதேச சபையில் காண முடியாமல் இருப்பதாகவும்,   தனது சொந்த தேவைக்காக அடிக்கடி வெளியில் செல்வதாகவும் அவர்கள் குறிப்பட்டுள்ளனர். நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் பல இடங்களிலும் இருந்தும் சிறுவர்கள்,  பெண்கள் எனப் பலரும் ஒன்று கூடும் இடமாகவும் உள்ளது . இது தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்., அண்மையில் இளம் பெண் ஒருவர் அவசரம் காரணமாக மலசல கூடத்தை பாவித்த பின்னர் தான் தண்ணீர் வராதது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் தனது உள்ளாடையால் தனது உடலைத் துப்பரவு செய்த வெட்கமான காரியம் நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்