Sun. Apr 28th, 2024

நம்மை தோற்கடிப்பது நமது சிந்தனைகளே   –       உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்        

நல்ல சிந்தனைகள் உயர்வைத்தரும் தீய சிந்தனைகள் வீழ்ச்சியையே ஏற்படுத்தும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

பார்வதி அறக்கட்டளை நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட. மேசைப்பந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து சிறப்பித்த சங்கத்தின் தலைவர் மேலும் தனது உரையில்

வெற்றி என்பது பெற்றுக்கொள்வது தோல்வி என்பது கற்றுக்கொள்ளவது எனவே தோல்வியடைந்தவர்கள் இப் போட்டியினை முயற்சியாக கருதி அடுத்த போட்டியில் வெற்றிபெறுவதற்கான தகைமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் அதற்கு சிந்தனை முக்கியமானது நாம் முன்னெடுக்கும் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையேல் அது சிறந்தபெறுபேற்றை தரமாட்டாது. எங்களை தோற்கடிப்பது எங்களது சிந்தனையே ஒழிய மற்றவர்கள் எங்களை தோற்கடிப்பதில்லை. அதாவது எங்களிடம் உருவாகும் பலவீனமான சிந்தனைகளான தன்னம்பிக்கையீனம் பயம் கோபம் பொறாமை என்பனவே எம்மை தோல்விக்கு கொண்டு செல்கின்றன. நாம் தன்னம்பிக்கை உடன் இருந்தால் எம்மைத்தவிர எம்மை யாராலும் தோற்கடித்து விடமுடியாது. இதனைக் கருத்தியலாக கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி முயற்சியை கைவிடாது பயிற்சியை இடையறாது மேற்கொண்டு வந்தால் நமது இலக்கு நம் கையில்.

அதற்கான சிந்தனையை நாம் உருவாக்கி கொள்வதுடன் நேர்மனப்பாங்கான சிந்தனையை வளர்ப்பதுடன் எதிர் மனப்பாங்கான சிந்தனையை இல்லாது செய்ய வேண்டும். இதற்கு பொற்றோர்களின் பங்களிப்பு முக்கியமானது என சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்