Sun. May 5th, 2024

தொற்றா நோய்க்குள்ளானோருக்கு அறிவித்தல் 

தொற்றா நோய்களான நீரிழிவு,  இதய நோய்,  உயர்குருதியமுக்கம், கொலஸ்ரோல் நிலை போன்ற தொற்றா நோய்க்குள்ளானோருக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தேவையான சேவைகள் வழங்குவதற்காக அரச வைத்தியசாலைகள் பிணிநிலைய நேர அட்டவணையின்படி செயல்பட்டு வருவதுடன் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்தும் வழங்கப்படும்.
உங்களுக்கு காணப்படும் அதிக ஆபத்து காரணமாக நோயாளர்கள் பிணிநிலையத்திற்கு வரவேண்டாம் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள், அதற்கு பதிலாக அவர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கியமான பொறுப்புடைய ஒருவரை பிணிநிலையத்திற்கு பிணிநிலைய கிளினிக் புத்தகத்துடன் அனுப்பலாம்.
குறித்த பிணிநிலையத்திற்கு அவர்களால் வரமுடியாவிட்டால் அவர்கள் ஏதேனும் ஒரு வார நாட்களில் அம்மருந்துகளை வெளிநோயாளர்கள் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
அவர்களின் பிணிநிலைய புத்தகப் பதிவுகள் அல்லது நோயறிதல் அட்டைகள் ஊரடங்கு அமுலின் போது அனுமதி பத்திரமாக பயன்படுத்தலாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்