Tue. Apr 30th, 2024

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுடன் கோட்டாவை சந்திக்கிறதாம் கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் நில விடுபிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடா்பி ல் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கோட்டாவை சந்திக்க கூட்டமைப்பு தீா்மானித்துள்ளது.

இதனை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். இது தொ டா்பாக மேலும் வா் கூறுகையில்,

கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும்  இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணியின்  சஜித்பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கோத்தாபய  ராஜபக்சவிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் நாங்கள் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தவிர படையினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்களும் உள்ளன என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்த பின்னர் முடிவெடுப்போம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்