Fri. May 3rd, 2024

செம்பியன்பற்று மாணவன் சாதனை

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி மற்றும் கர்நாடக இசைப் போட்டிகளில்  செம்பியன்பற்று அ.த.க.பாடசாலை மாணவன் ஆன்சன் நேரியோ அபினாஸ் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கர்நாடக இசை போட்டிகள் அநுராதபுரத்திலும்,  தமிழ் மொழித்தின போட்டிகள் கொழும்பு பம்பலப்பிட்டியிலும் அண்மையில் நடைபெற்றது.
இதில் செம்பியன்பற்று அ.த.க.பாடசாலை மாணவன் ஆன்சன் நேரியோ அபினாஸ் சிரேஷ்ட பிரிவினருக்கான தமிழ்மொழித் தின தனிநடிப்பிற்கான போட்டியில் முதலாமிடத்தையும், கர்நாடக இசைப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரை ஆசிரியர் கி.செல்வமோகன் அவர்கள் பயிற்றுவித்திருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்