Tue. Apr 30th, 2024

கொமர்ஷல் வங்கியின் நடமாடும் சேவை கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தில்

கொடிகாமம் பிரதேசத்தில் கொமர்ஷல் வங்கியின் நடமாடும்  சேவை 17/4/2020 வெள்ளிக்கிழமை  நடைபெறவுள்ளது

கொடிகாமம் பகுதியில்  வரணி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் முற்பகல் 8.00 தொடக்கம் 10.30 மணிவரையும் சுட்டிபுரம் அம்மன் கோவிலடியில் முற்பகல் 10.45 மணியிலிருந்து 11.45 வரையும் உசன் கந்தசுவாமி கோவிலடியில் நண்பகல் 12.00 மணியிலிருந்து 2.00 மணிவரையும் மிருசுவில் புனித நீககிலஸ் தேவாலயத்திற்கு அருகாமையில் பிற்பகல் 2.15 மணியிலிருந்து 4.15 மணிவரையும் கச்சாய் வீதி புனித பீற்றர் தேவாலயத்திற்கு அருகாமையில் பிற்பகல் 4.30 தொடக்கம் 5.30 வரையும் இடம் பெறவுள்ளது

இதேநேரம் சாவகச்சேரி பிரதேசத்தில் கொமர்ஷல் வங்கியின் நடமாடும்  சேவை 16/4/2020 வியாழக்கிழமை  நடைபெறவுள்ளது

பண பெறுவனவு வசதியை வழங்கும் நோக்கில் சாவகச்சேரி பகுதியில் 16/4/2020 வியாழக்கிழமை கச்சாய் (சேர்ச்) தேவாலயத்திற்கு அருகாமையில் முற்பகல் 9.00 மணியிலிருந்து 10.00 மணிவரையும் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை முன்பாக முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00மணிவரையும் கனகம்புளியடிச் சந்தியில் முற்பகல் 11.15மணியிலிருந்து 12.00 மணிவரையும் மட்டுவில் கமலாசனி வித்தியாலயம் முன்பாக பிற்பகல் 12.15 மணியிலிருந்து 1.00 மணிவரையும் நுணாவில் வைரகோவில் சந்தியில் பிற்பகல் 1.15 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணிவரையும் கைதடி கமநலசேவை முன்பாக பிற்பகல் 2.15மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரையும் இடம் பெறவுள்ளது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்