Thu. May 2nd, 2024

மந்திகை வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளராக Dr கமலநாதன் இன்று முதல் நியமனம்

மந்திகை வைத்தியசாலைக்கு இன்று  15-ம் தேதியிலிருந்து புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி  கமலநாதன் அவர்கள்பதவியேற்றுள்ளார். இவருக்கு முன்னர் இருந்து வந்த பணிப்பாளர் Dr குகதாசன் மீது நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில்,  அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வடமாகாண சுகாதார திணைக்களம் முன்வந்து, அவரை பதவியில் இருந்து இடைநிறுத்தி Dr கமலநாதனை அந்த இடத்துக்கு நியமித்தது.  இதனிடையே சுகாதார திணைக்களத்தின் உத்தரவை Dr  குகதாசன் உதாசீனம் செய்து வந்தநிலையில் இன்றய தினம் பொறுப்பை ஒப்படைத்து விலகியிருந்தார்.

நியூஸ் தமிழ் இணைத்ததளமும் முன்னை நாள் பணிப்பாளரின்  ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை அவ்வப்போது வெளிக்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் புதிய பணிப்பாளர் தற்போது உள்ள குறை நிறைகளை நிவர்த்தி செய்து நல்ல ஒரு சேவையை வடமராட்சி மக்களுக்கு வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் வடமராட்சி மக்கள் உள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்