Tue. Apr 30th, 2024

மந்திகை புதிய வைத்திய பணிப்பாளரும் அவரது செயல்பாடுகளும்

புதிய வைத்தி அட்சகராக வேலாயுதம் கமலநாதன்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக வேலாயுதம் கமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முதல் இவர் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் தொடர்பான விபரங்கள் சில
இவர் பல இன்னல்கள் மற்றும்
இடர்காலங்களின் போதும்
தமிழினத்திற்காக அளப்பரிய மருத்துவ சேவையாற்றியவர்
வைத்தியத் துறைக்கு அப்பால்
பல்வேறு பொது அமைப்புக்கள்,சமூக அமைப்புக்கள் போன்றனவற்றிலும் தன்னுடைய
பல்பரிமாண சேவைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர்.
கிரிக்கட் மீது அதீத பற்றுடையவர் அவர் ஒரு கிரிக்கட் வீரரும் ஆவார்.
புதுத்தோட்டம் ஸ்ரீ விநாயகர் ஆலய
பரிபாலன சபைத் தலைவராகவும் விளங்குபவர்
சுடர் ஒளி சனசமூக நிலையம் விளையாட்டுக் கழகம்
ஆகியவற்றை செயல்வழிப்படுத்தும் மிகப்பெரும்
பலம்  இவரே.
அண்மையில் கூடகொரோனா இடர் கால மக்கள் நலன் சார் திட்டங்களில் எமது
புலம்பெயர் உறவுகளை ஒருங்கிணைத்து
எமது மக்களிற்கான இடருதவிகளை வழங்கியதிலும் இவருடைய பணி முதன்மையானதும் மேலானதுமாகும்.
 இவருடைய ஒப்பற்ற ஆளுமை அளவற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில்
சில ஆண்டுகள் வைத்தியராகவும் கடமையாற்றியிருந்தார்.
 வரணி பிரதேச வைத்திய சாலையின்
பொறுப்பு வைத்தியராக இருந்த போது
இவருடைய காலத்திலேயே வரணி பிரதேச வைத்தியசாலை மேலான வளர்ச்சியைப் பெற்றது.. புதுக் கட்டடங்களோடும் புதுப் பொலிவோடும் சிறந்த மருத்துவ சேவையோடும் பரிணமிக்க இவருடைய மகத்தான
நிர்வாகத் திறனும் ஆளுமையுமே காரணமாகவும் அமைந்தன.  வரணிப் பிரதேச மக்கள்  மாத்திரமின்றி ஏனைய பிரதேச மக்களும் வைத்தியத்திற்காக நாடி வரும் வைத்திய சாலையாக வரணி பிரதேச வைத்திய சாலையை மாற்றியமைத்த ஒப்பற்ற கட்டமைப்பு
இவரருடைய கூட்டுணர்வு சார் நிர்வாகத்திறனை வெளிக்காட்டியது எனலாம். என்றும் வரணிப் பிரதேச மக்கள் Dr.கமலநாதன் அவர்களையும் அவரின் சேவையையும் மறக்கமாட்டார்கள்.
இவ்வாறாக பல விடயங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
புதுத்தோட்டம் ஸ்ரீ விநாயகர் ஆலய த்தைப் பொறுத்த வரை அதன்
கட்டுமானங்களிலும் இவருடைய பணி வரையறையற்றது.
புதுத்தோட்டம் முடக்காடு இணைப்பு வீதியை அகலிக்க காணிக் கொள்வனவு செய்வதிலும்   பிரதேச சபையில் பதிவு செய்வதிலும் அனைவரையும் இணைத்து வெற்றியடைய வைத்தவர்.
இவ்வாறாக மக்கள் மனங்களில் நிறைந்துவாழும்
வைத்திய கலாநிதி. வே.கமலநாதன் அவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின்
அத்தியட்சகராக நியமிக்கப் பட்டு நேற்றைய தினம் 15/04/2020
பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்