Sun. May 5th, 2024

கொட்டடி மீன் சந்தையினை மீளவும் திறக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது மீண்டும் யாழ்மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகள் தற்போது வீதியோரங்களில் கடும் வெயிலின் மத்தியிலும் தமது வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த விடயம் தொடர்பாக மீன் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களாக எமது வியாபார நடவடிக்கைகளை வீதியில் வைத்து கடும் வெயிலில் மேற்கொண்டு வருகின்றோம் இங்கே சமூக இடைவெளியினை பேணியே எமது வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம் .

இவ்வாறான நிலையில் எமக்கு வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே இடம்பெறுகின்றது வெயிலில் காய்ந்து வியாபார நடவடிக்கையை மேற் கொள்வதன் மூலம் எமக்கு பெரிதாக லாபம் எதுவும் கிடைக்கப்பதில்லை.

எனவே அதிகாரிகள்எமது சந்தையினை திறந்துவிடுமிடத்து நாங்கள் சந்தைக்குள்ளேயும் சமூக இடைவெளியினை பின்பற்றி எமதுவியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயங்களை கருத்திற்கொண்டுஎமது வியாபார நடவடிக்கையை இலகுபடுத்தும் முகமாக கொட்டடி மீன் சந்தையினை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்