Sat. May 18th, 2024

பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளியீடு

2021 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகளுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சகம் நேற்று  வெளியிட்டது.

அதன்படி, பெற்றோர்கள் அல்லது சட்டப் பாதுகாவலர்கள், 2021 ஆம் ஆண்டில் தங்கள் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்க விரும்பினால், 2020 ஜூலை 15 ஆம் தேதிக்கு முன்னர் தங்களை விண்ணப்பங்களை பதிவுசெய்யப்பட்ட தபால் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

சுற்றறிக்கையுடன் கிடைக்கும் மாதிரி விண்ணப்ப படிவத்தின் படி விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

அனுமதிக்க விரும்பும் மாணவர்கள், 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை 5 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் பிறப்புச் சான்றிதழை உறுதிப்படுத்தி அனுப்புதல் வேண்டும்.

ஜனவரி 31 திகதிக்குள் 06 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளும், 06 வயதுக்கு குறைவான பிள்ளைகளின் சேர்க்கை காலியிடங்கள் இருந்தால் மட்டுமே 2021 இல் அனுமதிக்கப்படுவார்கள்.

சுற்றறிக்கை மூலம் பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள், வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோர், பிரிந்து வாழும் பெற்றோர் மற்றும் ஒரு சில பிரிவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

இறுதித் திகதிக்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை பாடசாலையின் முதலாம் வகுப்பில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் மாணவர்கள் நேர்காணல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்த பின்னர், நேர்காணல் வாரியம் சுற்றறிக்கையால் விவரிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கும்.

கீழே உள்ள இணைப்பில் விண்ணப்ப மாதிரிப்படிவத்தை பார்வையிட முடியும்.

http://moe.gov.lk/web/images/News/2020/grade1_admision2020/2020_ad_t.pdf

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்