Fri. Apr 26th, 2024

குறைந்த வருமானம் பெறும் மக்கள் விபரங்களை கிராம அலுவலகர்கள் திரட்ட மாட்டார்கள் – சங்கம் அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களின் பெயர் விபரங்களை தாம் சேகரிக்க முடியாது என கிராம அலுவலகர் சங்கம் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு செய்வது சம்பந்தமாக தற்போதைய சூழ்நிலையில் , குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்று வகைப்படுத்துவது மிகவும் கடினம் தற்போது , அனைத்து பொதுமக்களும் ஒரே விதமான பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளனர் . இந்த அழுத்தத்தினால் இப்போது சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் வந்துள்ளனர். எனவே குறைந்த வருமானம் உள்ளவர்களை தெரிவு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டால் , அதிகாரிகள் மீது பொதுமக்களின் அதே அழுத்தத்தை தவிர்க்க முடியாது. இவ்வாறானதொரு நிலை கிராம உத்தியோகத்தர்களுக்கு எட்டாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறைந்த வருமானம் பெறுவோரை தெரிவு செய்வதை விட கூட்டுறவு மற்றும் சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அல்லது சலுகையுடன் விநியோகிக்கும் நடைமுறைப்படுத்துவதே சிறப்பானது என கிராம உத்தியோகத்தர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. துறைகளில் வேலை செய்கின்ற நிரந்தர ஊழியர்களைத் தவிர அனைத்து பொதுமக்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட வேண்டுமென எமது சங்கங்கள் யோசனை தெரிவிக்கின்றது. வேலைத்திட்டத்தை அரச மற்றும் தனியார் பிரதேசங்களில் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக , ஒவ்வொரு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமும் பொருத்தமான காத்திருப்போர் பட்டியல் உள்ளது . கிராம உத்தியோகத்தர்கள் பொது சன மாதாந்த உதவி பணம் பெறுவோர், முதியோர் உதவி பணம் பெறுவோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் பட்டியல்களுக்கு மேலதிகமாக உரிய காத்திருப்புப் பட்டியல்களையும் பிரதேச செயலகங்களுக்கு வழங்கியுள்ளனர். மேற்கூறிய பெறுநர்களுக்கு மேலதிகமாக , குறைந்த வருமானம் பெறுபவர்கள் மேற்கண்ட காத்திருப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம் . மேலும் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றுமாறும் ஏளைய உத்தியோகத்தர்களின் கடமைகளை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
மாவட்ட செயலாளர்களால் வழங்கப்படும் பணிப்புரைகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு பிரதேச செயலாளர்கள் கோருகின்ற பட்டியல்களை தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் சில மாவட்ட செயலாளர்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் காலி மாவட்ட செயலாளர்களினால் கோரப்பட்டுள்ளதுபோன்று பட்டியல் தயாரிக்க சென்றால் கிராம உத்தியோகத்தர்கள் மீது மக்களெதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறவும் வாய்ப்புள்ளது . எனவே , குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் சம்பந்தமான பட்டியல்கள் பிற உத்தியோகத்தர் நியமிக்கப்பட்ட பிற துறைகளில் ( உதாரணமாக வீட்டுத்தோட்டம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் செயல்பாடுகள் எனப்படும் கிராமியக்குழுச் செயற்பாடுகளில் இருந்து அனைத்து கிராம அலுவலர்களும் இப்போது விலக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் . தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் கிராம உத்தியோகத்தர்களிடம் இப்பணியை ஓப்படைக்க பல்வேறு அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்  எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்