Mon. Apr 29th, 2024

காப்புறுதி பணம் செலுத்த கால அவகாசம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு ஏற்ப அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமையவே இந்த நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சகல காப்புறுதி நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து குறித்த நிவாரணத்தை காப்புறுதிதாரர்களுக்கு பெற்றுக் கொடுக்க உள்ளதாக அவர் கூறினார்.

காப்புறுதி தவணை பணத்தை செலுத்த மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சலுகை காலம் சாதாரண மற்றும் ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கும் பொருந்தும் என அந்த கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலத்தால் காப்புறுதிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்